மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கிய அதிமுக!
மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் வில்சன் குடும்பத்தினருக்கு, அதிமுக கட்சி சார்பில் நிவாரண நிதி ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை அமைச்சர்கள் அவரது குடும்பத்தினரிடம் இன்று வழங்கினார்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டி என்ற கிராமத்தில் சுஜித் என்ற இரண்டரை வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல அரசியல் தலைவர்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். இரங்கல் தெரிவிக்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குழந்தையை இழந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி, அரசு தரப்பில் ரூ.10 லட்சமும், அதிமுக கட்சி சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நடுகாட்டுப்பட்டியில் சுஜித்தின் பெற்றோருக்கு அதிமுக சார்பாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நேரில் சென்று அமைச்சர்கள் வழங்கியுள்ளனர்.