மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் மனைவி பெற்றோரால் கடத்தப்பட்ட விவகாரம்; வேறு ஒருவரை திருமணம் செய்து வீடியோ வெளியிட்ட மனைவி... அதிர்ச்சியில் கணவர்...!
தென்காசியில் காதல் மனைவி கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அந்த பெண் வேறுஒருவருடன் திருமணம் செய்து கொண்டதாக வெளியான வீடியோவால் காதல் கணவர் அதிர்ச்சியடைந்தார்.
தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன், வெளிநாட்டில் வேலை செய்து தற்போது சொந்த ஊரான தென்காசியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் வினித் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார்.
வினித்தும் அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநில பெண் கிருத்திகா பட்டேல் என்பவரும் பள்ளி நாட்களில் இருந்தே காதலித்து வந்தனர். இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதிக்காததால் கடந்த டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியன்று இருவரும் நாகர்கோவில் கோர்ட்டில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் கிருத்திகா வீட்டார் கணவர் வினித்தை தாக்கிவிட்டு கிருத்திக்காவை வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரில் கிருத்திகாவின் பெற்றோர் உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவி பிரிந்து சென்றதால், மனைவியை மீட்க போராடி வருகிறார். இந்த நிலையில், கிருத்திகா பட்டேல் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ வெளிவந்துள்ளது.
மேலும், கிருத்திகா தனக்கு மைத்திரீக் பட்டேல் என்பவருடன் திருமணம் முடிந்து விட்டதாகவும், தான் பாதுகாப்பாக உள்ளதாகவும், இது குறித்து யாரும் இடையூறு செய்ய வேண்டாம் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய வினித், முழு சம்மதத்துடன் தன் மனைவி தன்னை திருமணம் செய்து கொண்ட நிலையில், மனைவியின் பெற்றோர் மிரட்டி வேறு திருமணம் செய்து வைத்துள்ளதாகவும், மேலும் கிருத்திக்காவை மிரட்டி வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், மனைவி வெளியிட்ட வீடியோவில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவத்தால் குழம்பிப்போன காவல்துறையினர் , விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.