#Breaking: கரும்பு விவசாயிகளுக்கு நற்செய்தி: கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.2945 ஆக உயர்த்தி அறிவிப்பு.!



Agriculture budget 2023 2024

இராமநாதபுரம் மிளகாய், பண்ரூட்டி பலா, மதுரை மல்லி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பேசியவை பின்வருமாறு, 

நூற்பாலை பஞ்சுகளை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய ரூ.12 கோடி செலவில் பருத்தி இயக்கம் ஏற்படுத்தப்படும். கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.2945 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.253 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கரும்பு கொள்முதலுக்கான சிறப்பு ஊக்கத்தொகை காரணமாக 2.5 இலட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள். கரும்பு சாகுபடி மேம்பாட்டை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. 

கோவையில் 5 ஆண்டுகளில் 1500 ஹெக்டேர் பரப்பில் கறிவேப்பில்லை உற்பத்தி செய்ய ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இராமநாதபுரம் பகுதியில் விளையும் மிளகாய் சாகுபடியை அதிகரிக்க பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு, கருவேல மரங்கள் அகற்றப்பட்டு விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

tamilnadu political

கடலூர், பண்ரூட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விளையும் பலா உற்பத்தியை 2500 ஏக்கர் பரப்பில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மண்டலம் அமைக்கப்படும். 

பருவம் இல்லாத காலத்திலும் மதுரை மல்லி கிடைக்க மகசூல் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தக்காளி, வெங்காயம் சீராக கிடைக்க, அதன் மகசூலை அதிகரிக்க ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முருங்கைக்கு 1000 ஹெக்டேர் பரப்பில் சிறப்பு மண்டலம் அமைக்கப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும்.