துரோகம் செய்தவர்களை களையெடுத்துவிட்டோம் - குட்டி ஸ்டோரியில் களைகளுக்கு அப்படித்த எடப்பாடி பழனிச்சாமி.!



aiadmk-edappadi-palanisamy-speech-20-dec-2022

 

எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்தின் தலைமை பொறுப்பு விவசாயிக்கு வந்துவிட்டது. அந்த விவசாயி துரோகம் செய்தவர்களை பொறுமையோடு கண்டறிந்து அகற்றிவிட்டார் என மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வதை குறிப்பிட்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றுகையில், "எனக்கு ஒரு குட்டி கதை நியாபகம் வருகிறது. முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் நல்ல உள்ளம் கொண்ட பெரியவர் விவசாயியாக வாழ்ந்து வந்தார். 

அவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஊழியர்கள் மூலமாக விவசாயம் செய்து, விவசாய வருமானத்தை ஊர் மக்களுக்கே தானம், தருமம், உதவிகள் செய்து வந்தார். இதனை அவர் தலையாய கடமையாகவும் எண்ணினார். இதனால் அப்பகுதி மக்களும் அவரின் மீது அன்பு, மரியாதை வைத்திருந்தார்கள்.

AIADMK

அப்பெரியவர் தனது மரணப்படுகையில் இருந்தபோது, தனது காலத்திற்கு பின்னர் வரும் நபர்களும் தமது பணியை எதிர்பார்ப்பு இன்றி செவ்வனே செய்ய வேண்டும் என எண்ணினார். அவரின் மறைவுக்கு பின்னர் அப்பதவி நல்ல மனிதரான விவசாயி ஒருவருக்கு வந்தது. 

அவர் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உண்மையாக, அக்கறையோடு, திறம்பட செய்து வந்தார். அவ்வூர் மக்களிடம் பெரியவரை போலவே அன்புடனும், பண்புடனும் இருந்து வந்தார். விவசாய மகசூலும் பெருகியது. இதனைக்கண்ட ஊழியர்களில் பொறாமை எண்ணம் கொண்ட சிலரோ விவசாய பணிகள் மற்றும் மகசூல் தடைபடும் வகையில் செயல்பட்டு இருக்கின்றனர். துரோகம் செய்தார்கள். 

AIADMK

அதற்காக விவசாய மகசூலை குறைக்க களைகளை வாங்கி வேளாண் நிலத்தில் விளையவைத்துள்ளனர். இதனை அறிந்த விவசாயியோ பொறுமையாக இடையூறுகளை மதிநுட்பத்தோடு செயல்பட்டு துரோகம் செய்தவர்களை கண்டறிந்து களையெடுத்துள்ளார். விளைச்சலை மேம்படுத்தி விவசாய பணிகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு பெரியவரை போல அனைத்தும் பிரித்து கொடுக்கப்படுகிறது" என்று பேசினார். 

எடப்பாடி பழனிச்சாமியின் மேற்கூறிய குட்டி ஸ்டோரியானது நேரடியாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோரையும், அவர்களின் ஆதரவாளர்களையும் தாக்கி இருப்பதாக அரசியல் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.