மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திமுக அரசு கொடுத்த அல்வா - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு குற்றச்சாட்டு.!
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலை, தமிழ் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "நகர்ப்புற, உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறோம். வெற்றி வாய்ப்பை கொடுப்பதில் மக்களே எஜமானர்கள். மக்கள் தான் நீதிமான்கள். திமுக அரசு வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்வா கொடுக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கும் பெரிய அல்வா கொடுத்துள்ளது.
மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அல்வா கொடுக்கும் போராட்டம் நடந்துள்ளது. இந்த அல்வாவின் பிரதிபலிப்பு நகர்ப்புற தேர்தலில் இருக்கும். பொங்கல் பரிசுத்தொகுப்பு என்ற பெயரில் தரமற்ற பொருட்களை கொடுத்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை கருப்புபட்டியலில் சேர்ப்போம் என அரசு தெரிவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.