திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? அதிமுகவுடன் கரம்கோர்க்கும் காங்கிரஸ்?.. முன்னாள் அமைச்சரின் பரபரப்பு ட்விட்.!



AIADMK Former Minister Sellur K Raju Tweet about Support Rahul Gandhi 

 

தமிழ்நாடு மாநில அரசியலை பொறுத்தமட்டில், திமுக-அதிமுக கட்சிகள் பல ஆண்டுகளாய் எதிரெதிர் அணியில் இருந்து குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. 

கூட்டணியில் பிளவு

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியமைத்து போட்டியிட்டுக்கொண்ட நிலையில், 2024 மக்களவை தேர்தலில் அதிமுக-தேமுதிக ஒரு அணியாகவும், பாஜக-பாமக மற்றொரு அணியாகவும் பிரிந்து போட்டியிட்டு இருக்கிறது. முடிவுகள் ஜூன் 04ல் தெரியவரும்.

இதையும் படிங்க: அண்ணாமலை மீது ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுத்தாக கூறப்பட்ட விவகாரம்; ஆளுநர் மளிகை விளக்கம்.!

அதிமுக-பாஜக கூட்டணியின் பிளவு என்பது பல ஆண்டுகளாக பனிப்போர் போல தொடர்ந்து, பின் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு உறுதியானது. இதற்குப்பின் இரு கட்சி தலைவர்களும் நேரடியாக வார்தைப்போரில் ஈடுபட்டு வந்தனர். 

செல்லூர் ராஜுவின் சமூக வலைத்தளபதிவு

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முந்தைய காலங்களில் பிரதமர் மோடியை ஆதரித்து பல நிகழ்ச்சிகளில் பேசிவந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் விடியோவை பகிர்ந்து, "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என கூறியுள்ளார். இது அதிமுக காங்கிரசை ஏற்றுக்கொள்ளப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. நெட்டிசன்களும் அதனை தங்களின் கருத்துபதிவேட்டில் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிளவுபடுகிறது அதிமுக? பாஜகவின் மாஸ்டர் பிளான் என்ன? - சட்டத்துறை அமைச்சரின் பகீர் தகவல்.!