திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிமுகவை கண்டு மு.க ஸ்டாலினுக்கு பயம்... திமுகவின் கொள்கை இதுதான் - முன்னாள் அமைச்சர் பாய்ச்சல்.!
திமுக பொதுக்குழுவில் மு.க ஸ்டாலின் பேசியதை விமர்சித்து முன்னாள் அமைச்சர் பதில் அளித்தார்.
மதுரையில் வைத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, "அதிமுக என்ற இயக்கம் வலுவாக இருக்கிறது. அதனை பார்த்து திமுக தலைவர் & முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம்.
அதனாலேயே அதிமுக உடைந்திருக்கிறது. தமிழக வரலாற்றில் எந்த முதல்வரும் எந்த காலத்திலும் பேசாததை முதல்வர் ஸ்டாலின் இன்று பேசியுள்ளார். அவர் தனது நிர்வாக குறைபாட்டை சொல்கிறாரா? கட்சியின் நிர்வாகிகளை குறிப்பிடுகிறாரா? என்று தெரியாத அளவிற்கு தனக்குள் இருந்த பயத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அவர் முழுக்க முழுக்க குடும்ப உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டு வருவதையே கொள்கையாக வைத்து செயல்படுகிறார். அதுவே திமுகவின் கொள்கை" என்று தெரிவித்தார்.