#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எது பெருசுன்னு அடிச்சி காட்டு... கல்வீசி தாக்குதல் நடத்திய ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தொண்டர்கள்... போர்களமான அலுவலகம்..!
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு இன்று சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டத்தில் 16 தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் தெரியவருகிறது.
இதனால் பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டி அதிமுகவினர் குவிந்து வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு எதிரான செயல்பாடுகளை கையில் எடுத்துள்ள அதிமுகவினர் மோதலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதால் காவல் துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என தீர்பளித்துள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு ஓ.பன்னீர் செல்வம் வருகை தருவாரா? அல்லது என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஓ.பன்னீர் செல்வம் அதிமுக த்தலைமை அலுவலகம் நோக்கி வந்தார்.
அப்போது, நிகழ்விடத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் ஆட்பறிக்க, இருதரப்பு மோதல் ஏற்பட்டு கல்வீச்சு தாக்குதலும் நடந்தது. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்க, காவல் துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.