திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாய்ப்பு கிடைத்தும் அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்ததால் பரபரப்பு.. ஆம்பூரில் பரபரப்பு சம்பவம்..!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப். 19 ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை இறுதி, செய்து வேட்பாளர்கள் பட்டியலை அதிரடியாக வெளியிட்டு வருகின்றனர்.
திமுக, அதிமுக கட்சிகள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வெற்றி பெற மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆம்பூர் நகராட்சி 14 ஆவது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த தமிழருவி என்பவர் அறிவிக்கப்பட்டார்.
இதனால் அவரின் வெற்றிக்கு கழகத்தினர் உழைக்க தயாராகிக்கொண்டு இருந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று இரவு 11 மணியளவில் தமிழருவி தன்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆறுமுகத்தின் தலைமையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.