பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விமானப்படை வீரர் பூச்சி மருந்து குடித்து உறவினர்கள் கண்ணீர் சோகம்.!
இந்திய விமானப்படை வீரர் பூச்சி மருந்து குடித்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகாமையில் நடுவலூர் ஊராட்சி, பகுதியில் வசித்து வருபவர் தங்கராசு. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 30). இவருக்கு சுவேதா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் டெல்லியில் இந்திய விமானப்படை வீரராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 22ஆம் தேதி தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது வடசென்னிமலையில் தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட குடும்பத்தினர் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.