வீடியோ: பாதுகாப்பாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.!! 141 பயணிகளும் நிம்மதி பெரும் மூச்சு.!!



air-india-flight-landed-safely-in-trichy-airport-141-pa

திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த நிகழ்வு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

141 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான சார்ஜாவிற்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று மாலை 5:40 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில் விமானம் வானில் பறக்க தொடங்கியதும் அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

2 மணி நேரமாக வட்டமடித்த விமானம்

இந்நிலையில் விமானத்தில் உள்ள எரிபொருள் முழுவதையும் காலி செய்துவிட்டு விமானத்தின் அடிப்பகுதியை உரசி பெல்லி லேண்டிங் செய்யுமாறு விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுரையின்படி விமானத்தின் எரிபொருளை தீர்ப்பதற்காக திருச்சி வானில் தொடர்ந்து விமானம் வட்டமடித்தது. இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு அறிந்த பயணிகளின் உறவினர்கள் என்ன நிகழுமோ.? என்ற அச்சத்தில் விமான நிலையத்திலேயே காத்திருந்தனர்.

இதையும் படிங்க: திருமணமான 9 மாதத்தில் சோகம்... போதை ஊசி மூலம் உயிரை மாய்த்துக் கொண்ட 21 வயது இளைஞர்.!!

பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

இதனைத் தொடர்ந்து விமானத்தின் எரிபொருள் காலியானதும் ஏர் இந்தியா விமானத்தை பாதுகாப்பாக பெல்லி லேண்டிங் முறையில் விமானி தரையிறக்கினார். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். மேலும் விமானம் பாதுகாப்பாக விமான நிலையம் திரும்பியதால் பயணிகளின் உறவினர்களும் நிம்மதி அடைந்தனர். திருச்சியில் 2 மணி நேரம் நிலவிய பரபரப்பிற்கு தற்போது அமைதி திரும்பி இருக்கிறது.

இதையும் படிங்க: செல்போனில் ரகசிய பேச்சு... தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை.!!