மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுக்கோட்டை: சீறி எழுந்த மஞ்சுவிரட்டு காளைகள்..! காளை முட்டியதில் ஆலங்குடி வாலிபர் பரிதாப பலி.!
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கல்லூர் அரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செம்முனீஸ்வரர் திடலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஏராளமான காளைகள் களமிறக்கப்பட்டன. மாடுபிடி வீரர்களும் போட்டிப்போட்டு அடக்கினர்.
அங்குநடந்த மஞ்சுவிரட்டு விழாவில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கு நடந்த மஞ்சுவிரட்டு விழாவில் ஆலங்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவபாரதி என்ற வாலிபர் காளை முட்டியதில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சிவபாரதி பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபர் சிவபாரதியின் மறைவிற்கு தமிழக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் இணையம் வாயிலாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.