96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
குறுந்தகவலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்; பரபரப்பில் சென்னை ரயில்வே காவல்துறையினர்!
லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் சென்னைக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலை வெடி குண்டு வைத்து தகர்க்கப்போவதாக குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் என்பதால் சென்னை ரயில் நிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக ஒரு மர்ம நபர் அனுப்பிய குறுஞ்செய்தி மக்களை பீதியடைய செய்துள்ளது.
இந்நிலையில் இதனை பற்றி தகவல் அறிந்த சென்னை ரயில்வே காவல்துறையினர் சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.