"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரை குற்றவாளியின் கருவை சுமக்க வற்புறுத்த இயலாது; அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் நீதிமன்றத்தில், 12 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைத்து மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதாவது, பலாத்காரத்தால் சிறுமி கர்ப்பமாகிவிட்ட நிலையில், அவரின் கருவை வளர்க்க அனுமதி வேண்டும் என அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் கருவை கலைக்க அனுமதி வழங்கி இருக்கின்றனர்.
இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதிகள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை, அவர்களின் வயிற்றில் கருவை சுமக்க வற்புறுத்த இயலாது. அதனால் குழந்தையை பெற்றெடுக்கவும் வற்புறுத்த முடியாது. மருத்துவரின் ஆலோசனையில் பேரில் விருப்பம் இருப்பின் கருவை கலைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.