கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#வேளாண்பட்ஜெட் 2023 - 24: பயிர்க்கடன் வழங்க ரூ.14 ,000 கோடி ஒதுக்கீடு; காவேரி படுகை திட்டத்திற்கு ரூ.1000 கோடி..!
டெல்டாவில் 1146 கி.மீ பாசன கால்வாய்கள் தூர்வாரப்படும். குமரி, நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் வாழை சாகுபடி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பேசியவை பின்வருமாறு,
கிருஷ்ணகிரி தென்னை, பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி, தூத்துக்குடி மிளகாய், கடலூர் கத்தரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு, கவுனி அரிசி, தஞ்சாவூர் அச்சுவெல்லம் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அதன் மீதான மதிப்பு அதிகரிக்கும்.
டெல்டாவில் 3ம் கட்டமாக 1146 கி.மீ பாசன கால்வாய்கள் தூர்வாரப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டத்தில் 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் வாழை சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிற்கடனாக ரூ.14 ஆயிரம் கோடி வழங்கப்படும்.
சன்ன ரக நெல்லுக்கு கூடுதலாக ரூ.100 ஊக்கத்தொகை வழங்கி கொள்முதல் செய்யப்படும். பொது நெல்லுக்கு ரூ.75 கோடி கூடுதலாக வழங்கி நெல் கொள்முதல் செய்யப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
காவேரி படுகை திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும். காவேரி பாசன கால்வாய், ஆறுகள் போன்றவற்றை தூர்வார ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.