திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னது மறுபடியும் பெண் குழந்தையா? வேண்டாம் என கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - அமுதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அமுதா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் அமுதா கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்குளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் வடிவேல் என்பவரது மருந்தகத்தில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் அறிந்துள்ளார்.
இதையடுத்து கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என தெரிய வரவே சட்டவிரோதமாக அதே மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்துவிட்டு வீடு திரும்பி உள்ளார் அமுதா. இந்நிலையில்தான் அவருக்கு இரத்தப்போக்கு அதிகமாகி சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அமுதா.
இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அமுதாவின் கணவர் கோவிந்தராஜிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்த தம்பதியினர் அது பெண் குழந்தை என தெரிய வரவே கருக்கலைப்பு செய்த போது இந்த விபரீதம் நடந்துள்ளதாக கணவர் கோவிந்தராஜ் போலீஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.