மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமேசான் டெலிவரி மையத்தில் ஆட்டையை போட்ட இளைஞர்கள்... சிசிடிவி மூலம் சிக்கிய தரமான சம்பவம்..!
அமேசான் கடை டெலிவரி மையத்தில் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை சிசிடிவியை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் அமேசான் கடை டெலிவரி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பணி முடிந்ததும் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு இரவு சென்றுள்ளனர்.
பின் மறுநாள் கடை மேலாளருக்கு கடை திறந்திருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர் சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் மூலமாக திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.