திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கர்நாடகா சரக்கு வேண்டாம்.. தமிழ்நாட்டு சரக்குதான் வேணும் - வேட்பாளர்கள் கதறலுடன் விநியோகம்.!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரச்சாரத்திற்கு தேவையானவை என்ற மறைமுக துண்டு சீட்டில் முதல் இடம் பிரியாணியில் இருந்து மதுவுக்கு மாறியுள்ளது. தங்களுக்காக வாக்கு சேகரிக்க வரும் தொண்டர்களுக்கு இரவு நேரத்தில் பிரியாணி வழங்கப்படுகிறதோ இல்லையோ மதுவை கண்டிப்பாக வேண்டும் என்று கேட்கப்படுகிறதாம்.
மதுபானம் அருந்தாத நபர்கள் கூட போட்டாபோட்டி போட்டு மதுபானம் வாங்கி, தங்களின் நண்பர்களான மதுபானம் அருந்தும் நபர்களிடம் கொடுக்கின்றனர். ஆம்பூரை சேர்ந்த அனைத்து வார்டிலும், அனைத்து வேட்பாளர்களும் மதுபானம் வாங்கி சப்ளை செய்து வருகின்றனர்.
சில வேட்பாளர்களோ குறைந்த விலையில் கிடைக்கிறது என கர்நாடக மாநில மதுபானத்தை கடத்தி வந்து கொடுக்கும் நிலையில், தமிழ்நாட்டு குடிமகன்கள் இதனை விரும்புவது இல்லை என்றும் கூறப்படுகிறது. பெங்களூரில் ரூ.70 க்கு குவாட்டர் மதுபானம் கிடைக்கும் நிலையில், தமிழகத்தில் குறைந்தபட்ச விலையே ரூ.120 ஆக உள்ளது.
இதனால் செலவு தொகைக்கு கட்டுப்படியாகும் என வேட்பாளர்கள் அதனை வாங்கி தந்தாலும், வெளிமாநில சரக்கு நமக்கு செட்டாகவில்லை. உள்மாநில சரக்கு வாங்கி தந்தால் ஓகே என்று அடம்பிடித்து வேட்பாளர்களுடன் வருபவர்கள் கேட்பதால், அதிக பணம் செலவு செய்து வேட்பாளர்களும் தமிழ்நாடு அரசு விற்பனை செய்யும் மதுவை வாங்கி தருவதாகவும் கூறப்படுகிறது.