19 மணிநேர விசாரணை.. ஆம்பூரில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 22 வயது கல்லூரி மாணவர் பரபரப்பு கைது.!



Ambur ISIS Terrorist Supporter Arrest by NIA

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். அவன் கொடுத்த தகவலின் பேரில் சேலத்தில் பதுங்கியிருந்த வங்கதேசம் நாட்டினை சேர்ந்த அப்துல் ஆலிம் முல்லா கைதானால். மேலும், அவனுடன் தங்கியிருந்த 6 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவர்களிடம் பெங்களுர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, பல பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது, பயங்கரவாத அமைப்பு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பவம் கொடுத்து இவர்கள் இருவரையும் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது அம்பலமானது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் 29 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

Ambur

அப்போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நீலிகொல்லை மசூதி தெருவில் வசித்து வரும் கல்லூரி மாணவர் அனாஸ் அலி (வயது 22), மேல் விஷாரமில் உள்ள தனியார் கல்லூரியில் எஞ்சினியரிங் 3-ம் ஆண்டு படித்து வரும் நிலையில், அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டார். மாணவர் கைது செய்யப்படும்போது, 10-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். 

அப்போது, மாணவர் உறங்காமல் மடிக்கணினியில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், அதிகாரிகளின் விசாரணையின் போது பதில் கூறாமல் மழுப்பியுள்ளார். லேப்டாப்பையும் தரையில் போட்டு உடைக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து, அனாஸ் அலியை கைது செய்த அதிகாரிகள், 19 மணிநேர விசாரணைக்கு பின்னர் ஐ.எஸ் அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தினர். அனாஸ் அலி கைதுக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.