#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆம்பன் புயல்: மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.! வானிலை ஆய்வு மையம்.
தற்போது அதி தீவிரமாக மாறி வரும் ஆம்பன் புயலானது நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலில் கடும் புயலாக மாறியிருந்த ஆம்பன் புயல் தற்போது வழுவிழந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இப்புயலானது தற்போது கொல்கத்தாவிற்கு சுமார் 700கிமீ தொலைவில் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாகவும், கடந்த 6 மணி நேரத்தில் மட்டும் மணிக்கு 16 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை வங்கதேசத்தில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இப்புயலால் மேற்கு மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றானது மணிக்கு 150-160 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மீனவர்கள் தெற்கு வங்கக்கடல், குமரி கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.