மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ கால் விபரீதம்... நிர்வாண வீடியோ வைத்து இளம் பெண்ணுக்கு மிரட்டல்... சென்னை இளைஞருக்கு வலைவீச்சு.!
புதுச்சேரியைச் சார்ந்த இளம் பெண்ணுக்கு நிர்வாண வீடியோ அனுப்பி மிரட்டல் விடுத்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த திலீப் குமார் என்ற 25 வயது இளைஞர் புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த இளம் பெண் திலீப் குமாரை விட்டு விலகவே ஒரே ஒருமுறை வீடியோ காலில் வந்து நிர்வாணமாக முழு உடலையும் காட்டும்படி கெஞ்சி இருக்கிறார். அதன் பிறகு முற்றிலும் விலகி விடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதனை நம்பி அந்தப் பெண்ணும் வீடியோ காலில் நிர்வாணமாக வந்துள்ளார். அதை வீடியோ பதிவு செய்து வைத்த இளைஞர் திலீப்குமார் அந்த வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிளாக் மெயில் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்தப் பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக உள்ள இளைஞர் திலிப்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.