#BREAKING: மிக்ஜாங் புயல் எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.!



ANNA UNIVERSITY CANCEL DEC 3RD 4TH DAY EXAM DUE TO RAIN 

 

வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மிக்ஜாங் புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடவுள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவில் புயல் சின்னம் உருவாகுவதற்கான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. 

தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு டிச.4 ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை எழும்பூர் மற்றும் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 142 இரயில்கள் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 04ம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்ட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. 

டிசம்பர் 03 மற்றும் 04ம் தேதிகளில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலை.,யின் தொலைதூர கல்வி திட்டத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.