ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட விவகாரம்; அரசுக்கு எதிராக அண்ணாமலை கண்டனம்.!



 Annamalai Condemn On Tiruppur Palladam Murder Case

 

பல்லடத்தை அதிரவைத்த கொலை சம்பவத்தில், அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், சேமலைக்கவுண்டம்பாளையம், வலுப்பூரம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் தெய்வ சிகாமணி, மனைவி அலமாத்தம்மாள், தம்பதிகளின் மகனான ஐடி ஊழியர் செல்வ குமார் ஆகியோர் இன்று மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: #Big Breaking: தாய்-தந்தை, மகன் கொடூர கொலை.. தமிழகமே அதிர்ச்சி.. பல்லடத்தில் துயரம்.!

தோட்டத்து வீட்டில் பயங்கரம்

செல்வகுமாருக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் கோவையில் வசித்து வரும் நிலையில், அவ்வப்போது வீட்டிற்கு வந்து பெற்றோரை பார்த்துச் சென்றார். அதேபோல, சம்பவத்தன்று வீட்டிற்கு வந்திருந்த செல்வகுமார், அவரின் பெற்றோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். 

நகைக்காக கொலை?

மூவரும் தோட்டத்து வீட்டில் சடலமாக இருந்த நிலையில், காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக வீட்டில் இருந்த 8 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது உறுதியானது. செல்வகுமாரின் மனைவி, தான் 7 வயது குழந்தையுடன் வசித்து வருவதாகவும், குற்றவாளிகளை விடக்கூடாது எனவும் பல்லடம் & திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கதறியழுதார். 

annamalai

அண்ணாமலை கண்டனம்

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கலையும், அரசுக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், தனது கண்டனத்தை அரசுக்கு எதிராக பதிவு செய்துள்ளார்.

அண்ணாமலை இதுகுறித்து பதிவு செய்துள்ள ட்விட்டில், "திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

கட்டப்பட்டுள்ள காவல்துறை கைகள்

கடந்த ஆண்டும் பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாதபடி காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால், தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார். 

அரசுக்கு கோரிக்கை

மாநில அரசின் முழுமுதற் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்க இயலாத திமுக அரசால், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. எதிர்க்கட்சியினரையும், அரசை விமர்சிப்பவர்களையும் கைது செய்ய மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தாமல், அவர்கள் பணியைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #Big Breaking: தாய்-தந்தை, மகன் கொடூர கொலை.. தமிழகமே அதிர்ச்சி.. பல்லடத்தில் துயரம்.!