'₹' குறியீடு மாற்றிய திமுக அரசு.. தமிழன் படைப்புக்கு திமுக எதிரியா? - அண்ணாமலை ஆவேசம்.!



ANnamalai On DMK Govt Changing Rs Symbol ₹ to Rs 

மும்மொழி கொள்கை, தேசிய கல்விக்கொள்கை விஷயத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு - மத்தியில் ஆளும் பாஜக அரசு இடையே கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. மாநில அரசும் - மத்திய அரசும் கடிதங்கள் வாயிலாக தங்களின் தகவலை பகிர்ந்துகொண்ட நிலையில், மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு பல விவாதங்களை தூண்டியது. 

இதனால் மாநில அளவில் அரசியல் ரீதியான கடும் எதிர்ப்புக்கும் வழிவகை செய்தது. ரூ.10000 கோடி கொடுத்தாலும், மும்மொழி கொள்கை தமிழ்நாட்டில் கிடையாது என திமுக அரசு தெரிவித்துவிட்டது. தொடர்ந்து தமிழ்நாடு மாநில அரசு தனது கருத்தில் உறுதியாக இருக்கிறது. 

annamalai

அண்ணாமலை கண்டனம்

இதனிடையே, விரைவில் தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடருக்கு, திமுக அரசு இதுவரை பயன்படுத்தி வந்த ₹ என்ற குறியீடுக்கு பதில், ரூ என்ற எழுத்தை பதிவு செய்துள்ளது. இது நேரடியாக மத்திய அரசை எதிர்க்கும் விதமாக அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: மீண்டும் மீண்டுமா? திமுக அரசின் மீது பாய்ச்சலில் அண்ணாமலை.! கடும் கண்டனம்.!

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பதிவில், ஒட்டுமொத்த பாரத தேசத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயத்தை திமுக அரசு மாற்றி இருக்கிறது. முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வன் மகனான தமிழர் உதயகுமார் உருவாக்கிய ₹ குறியீடு தவிர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வுளவு முட்டாள்தனமானவர் முக ஸ்டாலின் அவர்களே" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: டெல்லி, சத்திஸ்கர் போல தமிழ்நாட்டில் மாபெரும் மதுபான ஊழல்? அண்ணாமலை சூசகம்.!