நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
#Breaking: திமுக அரங்கேற்றும் மெகா நாடகம்.. தோலுரிக்க பாஜக போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு.!

தமிழக பாஜக கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அண்ணாமலை தலைமையிலான பாஜக கட்சி, பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் டாஸ்மாக் துறையில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை சோதனை செய்து அறிவித்தது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு நாங்க பதில் சொல்ல அவசியமில்லை - தவெக புஸ்ஸி ஆனந்த்.!
திமுக அரசு மீது விமர்சனம்
இந்த விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்து, அண்ணாமலை தலைமையில் நடைபெறவிருந்த போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் 2026 தேர்தலில் மக்களின் கவனத்தை பெற, அடுத்த ஒவ்வொரு நாளும் பாஜக போராட்டத்தை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் நடக்கும் படுகொலை சம்பவங்கள் குறித்த விஷயத்துக்கு, பாஜக ஆளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், அண்ணாமலை போராட்டம் குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்! தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை, படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை.
பாஜக போராட்டம் அறிவிப்பு
பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு.குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, தமிழக பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிக்கை
குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்!
— K.Annamalai (@annamalai_k) March 21, 2025
தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை, படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை.
பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு.… pic.twitter.com/NyhqLPrFM0
இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்கள்? நெல்லையில் நடந்த கொலை விவகாரம்; கடும் அண்ணாமலை கண்டனம்!