#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Troll செய்தவர்களுக்கு சாபம் விட்ட அன்னபூரணி : ஒவ்வொரு நொடியும் நிம்மதியா இருக்கமாட்டீங்க - சாப வீடியோ வைரல்.!
தன்னை கலாய்த்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடியும் நிம்மதியில்லாமல் கடப்பார்கள் என அன்னபூரணி சாபம் விடுத்த பகீர் வீடியோ வைரலாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கள்ளக்காதலனுடன் கரம்கோர்த்து சென்று கணவரை உதறிவிட்டவர் அன்னபூரணி. இவரின் காதலர் அரசு சமீபத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து திடீர் சாமியாராக பிரபலமாகி மக்களுக்கு தீட்ஸை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தன்னை டிரோல் செய்தவர்களுக்கு அன்னபூரணி அரசு அம்மாள் வெளியிட்டுள்ள வீடியோவில், "இறை சக்தி நேரடியாக வெளிப்படும்போது உடலில் அதிர்வு ஏற்படுகிறது. அப்போது, வந்துள்ளவர்களின் கர்மபலனை அது வெளியே எடுக்கிறது. இந்த சமயத்தில் உடலில் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அதிர்வு ஏற்படுகிறது. அதைப்பற்றி தெரிந்தால் பேசுங்கள். எனது உடை, நகை குறித்து பேசுகிறார்கள். இயற்கை எனக்கு கொடுத்துள்ளது.
நான் விதவிதமாக உடை அணிந்து நகைகள் போடுவேன். நான் எப்படி இருக்க வேண்டும் என்று இயற்கை முடிவு செய்துவிட்டது. இன்னமும் நான் விதவிதமாக உடை அணிவேன். நான் 6 ஆண்டுகளாக எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் இருந்தேன். நீங்கள் தான் என்னை பிரபலப்படுத்தினீங்கள்.
ஏனடா சும்மா இருந்த அன்னபூரணியை பெரிதாக்கினோம், அவரை ஏன் அவதூறாக பேசினோம் என சிந்திப்பீர்கள். என்னை அவதூறாக பேசியதற்காக ஒவ்வொரு நாளும், நேரமும், நொடியும் கஷ்டமும், கவலையும், துக்கமும் தான் உங்களுக்கு வரும்.
நிம்மதி உங்களுக்கு இருக்காது. இந்த யுகத்தில் மட்டுமல்லாது, எத்தனை யுகம் கொண்டாலும் மன்னிப்பு கிடையாது. இந்த பதிவு என்னை தவறாக பேசியவர்களுக்கு மட்டுமே.
என் பின்னால் சிலையை வைத்து வியாபாரம் செய்ய நான் வரவில்லை. கணினிக்குள் Software Program செய்யப்பட்டுள்ளதை போல, கருவுக்குள் உருவாகும் போதே அனைத்தும் Program செய்யப்பட்டுள்ளது. அதை மாற்றிவிட முடியுமா?. முட்டாள் தனத்தில் இருந்து மக்களை விடுவிக்க இயற்கை என்னை செயல்படுத்துகிறது. உண்மை ஆன்மிகம் என்பது எனது ஆன்மீகம் தான்" என்று தெரிவித்துள்ளார்.