திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கராத்தே பயிற்சி பெயரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோவில் கைது.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், அண்ணா நகரில் வசித்து வருபவர் கர்ணன் (வயது 36). இவர் இரவங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்க்கிறார்.
அப்பள்ளியில் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்குவதாக கூறி இருக்கிறார். இதனை ஏற்று பயிற்சிபெற்ற வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த மாணவிகள் விஷயத்தை வெளியே கூற இயலாது தவித்துள்ளனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், அரசின் 1098 என்ற குழந்தைகள் நலத்துறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அதிகாரிகள் குழு கடந்த 24ம் தேதி விசாரணை நடத்தி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், தலைமறைவாக இருந்த கர்ணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.