பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அக்கா-தம்பி கள்ளகாதலால் கணவன் படுகொலை.. ஆசையாக பேசி கணவரை வரவழைத்து பயங்கரம்.!
அன்பான கணவன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக வெளியூரில் கஷ்டப்பட, உள்ளூரில் ராணியாக இருந்த மனைவியின் திருமணத்தை மீறிய உறவால், தனது கள்ளக்காதலனுடன் வாழ்க்கையை இழந்து கம்பி என்னும் சோகம் நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம், வெண்மான்கொண்டான் கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமாக உள்ள கள்ளங்காடு பகுதியில் முந்திரித்தோப்பு உள்ளது. அங்கு கடந்த அக்.30 அன்று, மனித உடல் எரிந்துகொண்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர், உடையார்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு உடையார்பாளையம் காவல் துறையினர், ஜெயங்கொண்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்தனர். பொதுமக்கள் சாக்கு, நீர் ஆகியவற்றை வைத்து தீயை அணைத்தனர். காலம் கடந்த நடவடிக்கையால் உடல் எரிந்து கரிக்கட்டையானது. உடலை ஆணா? பெண்ணா? என அடையாளம் காண இயலவில்லை. பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் என தெரியவந்தது.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் தத்தனூர் குடிக்காடு பகுதியில், சாலையில் இரத்தம் சிதறி கிடந்துள்ளது. இதன் மாதிரிகள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 7 நாட்கள் எவ்வித துப்பும் கிடைக்காத நிலையில், 8வது நாளில் கொலையானவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.
அதாவது, ஜெயங்கொண்டம் வடகடல் கிராமத்தை சேர்த்தவர் சுரேஷ். இவர் சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில், பூகட்டும் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி அனுபிரியா. இவரின் சித்தப்பா மகன் வேல்முருகன். இவர் அங்குள்ள ஆலவாய் கிராமத்தை சேர்ந்தவர். அனுபிரியா - வேல்முருகன் அண்ணன் - தங்கை உறவு கொண்டவர்கள். இந்நிலையில், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம், கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. அதாவது, தனது அக்காவுடன் தம்பி நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
வேலைக்காக சுரேஷ் சென்னை செல்லும் சமயத்தில், வேல்முருகன் - அனுபிரியா தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் கள்ளக்காதல் விவகாரம் சுரேஷுக்கு தெரியவந்து, அவர் தனது மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனையடுத்து, தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தங்களின் திட்டப்படி சென்னையில் இருந்த சுரேஷை அரியலூர் வரவழைத்து, அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அனுபிரியா - சுரேஷ் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு பயணித்து இருக்கின்றனர்.
வடகடல் பிரிவு சாலை வரும்போது, வேல்முருகன் வழிமறித்து சுரேஷை அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த விவகாரத்திற்கு அனுப்ரியாவும் உடந்தையாக இருக்கவே, கொலை திட்டத்தை புரிந்துகொண்ட சுரேஷ் வெட்டுக்காயத்துடன் துள்ளத்துடிக்க உயிரிழந்தார். பின், அவரின் உடலை மீட்டு வெண்மான்கொண்டான் முந்திரிக்கட்டில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கின்றனர்.
காவல் துறையினர் கள்ளக்காதல் ஜோடியிடையே நடந்த விசாரணையில் உண்மையை தெரிந்துகொள்ளவே, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.