மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிக்க பணம் தராததால்... ஆத்திரத்தில் மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கணவன் கைது..!
சரக்கடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பரமத்திவேலூரை அடுத்த வேட்டுவங்காடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வரும் தம்பதியினர், மாதேஷ்(45), இவரது மனைவி செல்வி (35).
இந்நிலையில் இரவு மது வாங்குவதற்காக மனைவி செல்வியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி செல்வி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாதேஷ், அங்கிருந்த அரிவாளை எடுத்து செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாதேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிக்க பணம் தராததால் மனைவியை, கணவர் அரிவாளால் வெட்டி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.