திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தோனியின் பெயர் உச்சரிப்பு வரும் வகையில்; "ட்ரோனி" என்ற கண்காணிப்பு ட்ரோன் அறிமுகம்...!!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, சென்னையில் இயங்கும் ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிறுவனம் ட்ரோனி என்ற பெயரில் கண்காணிப்பு ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது.
தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவருகிறார். கிரிக்கெட்டிலிருந்து விலகிய பிறகு பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். மது தயாரிப்பு, சிமெண்ட் ஆலை, விவசாயம், விளம்பர நிறுவனம் என பல்வேறு வர்த்தகத்தில் கவனம் செலுத்திவரும் தோனி தற்போது ட்ரோன் பிசினஸில் இறங்கியுள்ளார்.
சென்னையில் இயங்கிவரும் கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள தோனி, அந்த நிறுவனத்தின் அம்பாஸடராகவும் இருந்து வருகிறார். எதிர்காலத்தில் ட்ரோன்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்ந்து ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் தோனி.
பேட்டரி மூலம் இயக்கப்படும் குவாட்காப்டர் கண்காணிப்பு ட்ரோன்னை தோனியின் பெயர் உச்சரிப்பு வரும் வகையில் Droni என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம்.