மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு ஜல்லிக்கட்டு வீரருக்கு தான் ஜல்லிக்கட்டின் அருமை தெரியும்.! உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவிற்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்.!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் திரு.இசக்கி ராஜா அவர்கள். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டு (85 to 90) கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
மேலும் சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவின் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலதரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வந்தன.
கோவில்பட்டியை சேர்ந்த உதவி ஆய்வாளர் இசக்கிராஜா அவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல மதிப்பும், வரவேற்பும் உள்ளது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அது காவலர்களுக்கு சவாலான பணி தான். ஏராளமான கூட்டங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் இருப்பதால் எதாவது குளறுபடி நடந்தால் காவலர்கள் லத்தியை எடுப்பார்கள்.
இந்தநிலையில், தமிழ்நாடு ஐல்லிக்கட்டு பயிற்சி மையம் சார்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரன்பட்டியில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் ஜல்லிக்கட்டு காளைகளும், மாட்டின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் சிரமப்படாத வகையில் மிகவும் நிதானமாக, நேர்த்தியாக அவரது பணியை செய்துள்ளார் இசக்கி ராஜா. அந்த வீடியோவில் ஒரு ஜல்லிக்கட்டு வீரருக்கு தான் ஜல்லிக்கட்டின் அருமை தெரியும்.
இசக்கிராஜா அவர்களும் முன்னாள் ஜல்லிக்கட்டு வீரர் தான் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் அணைத்து ஜல்லிக்கட்டு விழாவிலும் இவர் பாதுகாப்பிற்கு வந்தால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் எந்த இடையூறும் வராது என கூறுகின்றனர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள். திரு.இசக்கி ராஜா அவர்கள் அந்த ஜல்லிக்கட்டு விழாவை கையாண்ட வீடியோ வைரலாகி வருகிறது.