ஏடிஎம் நம்பர் பாரு.. கவனமாக பேசினால் சகட்டுமேனிக்கு திட்டு.. பிராடு கும்பல் அட்டூழியம்..!
சைபர் குற்றங்கள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சைபர் குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் தகவல் தொழில்நுட்பத்தை உபயோகம் செய்து குற்றங்களில் ஈடுபடுவதால், அவர்களை எளிதில் கைது செய்ய இயலாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.
இதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கும்பல், வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஏடிஎம் அட்டையின் மீது உள்ள நபரை கேட்டு தகராறு செய்கிறது. அமைதியாக அய்யாசாமி என்று தொடங்கும் கும்பல், எதிரில் பேசும் பயனாளர் சுதாரித்து விட்டால் அவர்களை தவறாக பேசும் சம்பவமும் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஆண்கள் என்ற பாரபட்சமின்றி அவர்களை வரைமுறை இல்லாமல் திட்டித் தீர்க்கும் சங்கட நிலைகள் தற்போது ஏற்பட்டுள்ளன.
இன்று மாலை நேரத்தில் ஒருவருக்கு தொடர்பு கொண்ட இந்த கும்பல், வங்கியின் ஏடிஎம் அட்டையில் உள்ள நம்பரை கேட்டுள்ளது. பெண்மணி சுதாரித்து நான் வங்கிக்கு சென்று தந்து கொள்கிறேன் நீங்கள் யார் ? என்று கேட்க எதிர்முனையில் பேசியவர் உன்னால் என்ன செய்ய முடியும் என்ற வார்த்தையை ஆரம்பித்து, அந்த பெண்மணியை நாகூசும் வார்த்தையால் திட்டி உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள் என்று மிரட்டி இருக்கிறான்.
இதுபோன்ற மிரட்டல்கள் புதிதாக ஒன்றும் நடைபெறவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.