மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதமாற்றம் செய்வதாக கூறி இளம் பெண் மீது தாக்குதல்... இந்து முன்னணி நிர்வாகி மீது புகார்.!
இந்து இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்ட கிறிஸ்தவ பெண்ணை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் பிரின்சி இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது வடமதுரையில் சந்தை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முருகனின் அக்கா வீட்டிற்கு பிரின்சி சென்று இருக்கிறார். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் பிரின்சியை மதமாற்றம் செய்வதாக கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கியிருக்கின்றனர். மேலும் அவரது மகளையும் தலையில் பிளாஸ்டிக் பைபால் அடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரின்சி மற்றும் அவரது கணவர் முருகன் இருவரும் வடமதுரை காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவிற்கு எதிராக புகார் அளித்தனர். மேலும் ஈஸ்வரனும் அவரது மனைவி மஞ்சுளாவும் தங்களின் மீது பொய் புகார் அளித்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவன் மற்றும் மனைவி இருவரும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.