மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரயில் தண்டவாளத்தை அலட்சியமாக கடக்க முயன்றதால் சோகம்: தாய்-மகன் பரிதாப பலி.!
சென்னையில் உள்ள ஆவடியில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40).
ஆவடி கோவர்த்தனகிரி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்துவரும் கூலித்தொழிலாளி மங்கா (வயது 36). இவரின் சொந்த ஊர் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் ஆகும்.
மங்காவின் கணவர் அப்பண்ணா. தம்பதிகளின் மகன் நவீன் (வயது 12). சம்பவத்தன்று ஆவடி இரயில் நிலைய தண்டவாளத்தை ரமேஷ், நவீன், மங்கா ஆகியோர் தனித்தனியே அவசர கதியில் கடக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது, அவ்வழியே வந்த அதிவிரைவு இரயில் மோதி மங்கா மற்றும் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் நவீன் படுகாயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக ஆவடி இரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.