திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பகீர்.. பிறந்தநாள் அன்று கேக் சாப்பிட்டு உறங்க சென்ற பெண் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!
மதுரை மாவட்டம் சாலைக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த ஷர்மிளா பிரியாவிற்கும், திருச்சி சுண்ணாம்புகாரன் பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஷர்மிளா பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கேக் சாப்பிட்டு உறங்க சென்ற ஷர்மிளா பிரியா கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார்க்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் ஷர்மிளா பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பரிசோதனையின் முடிவில் கேக் சாப்பிட்டுவிட்டு ஷர்மிளா பிரியா உடனே உறங்க சென்றதால் நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் பிறந்தநாள் அன்று பெண் ஒருவர் கேக் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.