தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பி.சி.சி.ஐ பொதுமேலாளராக, இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் அபே குருவில்லா நியமனம்?..!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்து வந்தவர் அபே குருவில்லா. அண்டர் 19 பிரிவில், இந்தியாவுக்காக டி 20, டெஸ்ட், உலக கோப்பை என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். 1990-களில் கலக்கல் நாயகனாக வலம்வந்த அபே, கடந்த 2000 ஆம் வருடம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அபே குருவில்லா பி.சி.சி.ஐ-யின் பொது மேலாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பி.சி.சி.ஐ பொதுமேலாளராக இருந்து வந்த தீரஜ் சோப்ரா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்ட நிலையில், அந்த பொறுப்புக்கு அபே குருவில்லா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Former India cricketer Abey Kuruvilla to be appointed as BCCI's General Manager Operations: Sources pic.twitter.com/pPaxYn72Hn
— ANI (@ANI) March 3, 2022