மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் வருகைதந்த கரடியாரால் கதறிப்போன இளைஞர்.. டமால்., படால்., நொறுக்... நடுங்கிப்போன குடும்பம்..!
வீட்டிற்குள் புகுந்த கரடி நள்ளிரவு நேரத்தில் தின்பண்டங்களை வேட்டையாடி சென்றது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர், மட்டக்கண்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்திலிருந்து வெளியே வரும் கரடிகள், குடியிருப்பு பகுதிகளில் சுற்றுவதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும், வீடுகள் மற்றும் கடைகளில் இருக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றையும் சாப்பிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளன. இந்நிலையில், மஞ்சூர் அண்ணாமலை பகுதியைச் சார்ந்த துரை என்பவர், நேற்று இரவு குடும்பத்துடன் சாப்பிட்டு உறங்கி கொண்டிருந்தார்.
அப்போது, நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த கரடி, சமையல் அறைக்குள் இருந்த எண்ணையை எண்ணெய் மற்றும் தின்பண்டங்களை ருசி பார்த்துக் கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த துரை சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் வருவதைப் பார்த்து கரடி புதருக்குள் சென்று மறைந்துள்ளது.