மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக வயோதிகர் அடித்தே கொலை.. 3 பேர் கும்பல் வெறிச்செயல்., நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
அப்பாவி முதியவரை மாட்டிறைச்சி வைத்திருந்தார் என கூறி அடித்தே கொலை செய்த சோகம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள சிவுன் மாவட்டம், ஜோகியா கிராமத்தை சேர்ந்த முதியவர் நசீம் குரேஷி (வயது 60). இவர் தனது உறவினர் பிரோஸ் அகமத் குரேஷி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, இவர்களை இடைமறித்த 3 பேர் கும்பல், இருவரையும் மாட்டிறைச்சி எடுத்து செய்வதாக சந்தேகித்து சோதனை செய்துள்ளது. அவர்கள் தங்களிடம் மாட்டிறைச்சி இல்லை என்று கூறியும் பலன் இல்லை.
விபரீதத்தை உணர்ந்த அகமத் குரேஷி பயத்தில் அங்கிருந்து ஓடி தப்பியுள்ளார். ஆனால், முதியவரான நசீம் குரேஷி அங்கேயே இருக்க, 3 பேர் கும்பல் அவரை முதியவர் என்றும் பாராது அடித்து நொறுக்கியுள்ளது.
தப்பி சென்ற அகமத் குரேஷி ரசூல்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முதியவர் நசீம் குரேஷியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நசீம் குரேஷி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிந்து 3 பேரை கைது செய்தனர்.