வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
அதிவேகத்தால் அதிபயங்கரம்... பிறந்தநாளை இறந்தநாளாக்கிய இளசுகள்.. பேருந்து - டூவீலர் தீப்பிடித்து பரிதாப பலி.!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி மேம்பாலம் வழியே மதுரையில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணம் செய்து கொண்டிருந்தது.
சாலையின் எதிர் திசையில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்துடன் வந்துள்ளனர். இவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளாக, 2 இளைஞர்கள் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். வாகனத்தை இயக்கி வந்தவர் பேருந்தோடு சிக்கிக்கொண்டார்.
இருசக்கர வாகனம் பேருந்துடன் மோதிய வேகத்தில் இரண்டு வாகனமும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த இளைஞர் எரிந்து உடல் கருகி பலியாகினார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், இரண்டு வாகனமும் எலும்புக்கூடு ஆனது.
விசாரணையில், ஒட்டன்சத்திரம் பொதுப்பணித்துறை இன்ஜினியர் மகன் பிரவீன் என்பவரின் வாகனம் அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது அம்பலமானது. பிரவீன் தனது பிறந்தநாளை நண்பர்களான நரசிம்மன் மற்றும் ஆகாஷ் ஆகியோருடன் கொண்டாடியுள்ளார்.
பின்னர், திண்டுக்கல் நோக்கி பயணம் செய்த நேரத்தில் விபத்தில் அவர் பலியாகியுள்ளார். அவரின் நண்பர்கள் இரண்டு பேரும் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மூவரும் 12 ம் வகுப்பு மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டன்சத்திரம் அருகே அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து, ஒருவர் உயிரிழப்பு#palani pic.twitter.com/AftRPqlsNX
— Tamil Diary (@TamildiaryIn) September 7, 2022