திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தனியார் வங்கி மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!
திருவள்ளூர் அருகே தனியார் வங்கி மேலாளரை தாக்கிய பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இணைந்த ஏடிஎம் மையத்திற்கு பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் கார்டை மெஷினில் செலுத்திய பிறகு சர்வீஸ் வேலை நடந்து வருகிறது பணம் எடுக்கக் கூடாது என ஊழியர் கூறியுள்ளார்.
ஆனால் அபிலாஷ் அதனையும் மீறி ஏடிஎம் மிஷினில் கார்டை சொருகியதால், வங்கி உதவி மேலாளர் அபிலாஷை கண்டித்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த அபிலாஷ் வங்கி மேலாளரை கடுமையாக திட்டி தாக்கியுள்ளார்.
இதனையடுத்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகி அபிலாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.