மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வனவிலங்குகளை வேட்டையாட சென்ற நபர் துப்பாக்கியால் சுட்டு, எரித்துக்கொலை!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை அடிவாரம் கோவில் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஏழுமலை. இவர் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக பதவி வைத்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 8ம் தேதி அருகிலுள்ள ஜவ்வாது மலையில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றுள்ளார்.
அப்போது இவருடன் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான காசி, ஜெயராமன் உட்பட 8 பேர் சென்றுள்ளனர். மறுநாள் இரவு 9 மணியளவில் ஏழுமலை தனது மனைவி மற்றும் பெற்றோருடன் செல்போனின் பேசியுள்ளார். ஆனால் அதன் பின்னர் ஏழுமலையிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து ஏழுமலையான் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஏழுமலை உட்பட 9 பேரையும் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மதியம் திருப்பத்தூர் வனப்பகுதியை ஒட்டிய மீன்மடுவு என்ற பகுதியில் மாயமான ஏழுமலையின் சடலம் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் அவரது உடலில் பல இடங்களில் கொண்டு பாய்ந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஏழ்மனையின் உடலை சிங்கரபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நண்பர்கள் 8 பேருடன் வனப் பகுதிக்குள் சென்ற ஏழுமலை அங்கு அவர்களுக்குள் இடையே நடந்த தகராறு சுட்டு கொல்லப்பட்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.