மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாஜக நிர்வாகி துப்பாக்கியால்சுட்டு, எரித்து கொலை.. நண்பர் கைது!
பாஜக நிர்வாகி சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை அடிவாரம் கோயில் கொள்ளை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் எட்டாம் தேதி ஏழுமலை மற்றும் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 8 பேருடன் வன விலங்குகளை வேட்டையாட ஜவ்வாது மலை வனப் பகுதிக்கு சென்றவர்கள் மாயமாகியுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் நேற்று முன்தினம் தேடி சென்ற போது திருப்பத்தூர் வனப்பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, தீட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஏழுமலையின் உடல் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் சென்ற செல்போன் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் விழுப்புரம் பகுதியில் பதுங்கி இருந்த காசி என்பவரை நேற்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.