#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிரடி தீபாவளி போனஸ்! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அறிவித்தபடி 20 சதவீத தீபாவளி போனஸ் வியாழக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் இன்று புதன்கிழமை தீபாவளி முன்பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தீபாவளிக்காக வழக்கமான பேருந்துகளோடு 21 ஆயிரத்து 526 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 20 சதவீதம் நாளை வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.