புத்தகம் விரும்பிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு; சென்னையில் புத்தக திருவிழா



book festival in chennai at 17 Aug

புத்தகம் வசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் புத்தகம் வாசிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில்  தமிழ்நுால் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டு குழுமத்தின் சார்பில், ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நான்காம் ஆண்டு, சென்னை புத்தக திருவிழா, 17 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. 

book festival

இதில், 200க்கும் மேற்பட்ட அரங்குகளில், கோடிக்கணக்கான புத்தகங்களும் இடம்பெற உள்ளன. துணை முதல்வர் பன்னீர்செல்வம், 17ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, புத்தக திருவிழாவை துவக்கி வைக்கிறார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விஜயராகவன், பள்ளிக்கல்வி மற்றும் நுாலகத்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

book festival

இதைத் தொடர்ந்து, பிரபல கவிஞர்களின் கவிதை வாசிப்பு, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், வாசகர் பங்கேற்கும் வினாடி - வினா என, ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. நிறைவு நாளில், 10 பிரிவுகளில், சிறந்த புத்தகங்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.