மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த குழந்தை! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
வேலுார் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இவர் பிரசவத்திற்காக வேலுார் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சமூக நலத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. விசாரணையில், இதற்கு காரணம் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.
அந்த சிறுமியின் எதிர்வீட்டை சேர்ந்த 18 வயது சிறுவனும், இந்த சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, வீடு திரும்பியுள்ளனர்.
ஆனால் அந்த சிறுமி தாலியை மறைத்து வைத்துக் கொண்டு திருமணம் நடக்காதது போல் வீட்டில் நாடகமாடி வந்துள்ளார். இருப்பினும் அடிக்கடி இருவரும் சந்தித்து தனிமையில் நெருக்கமாக இருந்ததன் காரணமாக, அவர் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.