பப்ஜி-க்கு முழுநேர அடிமையானால் இதுதான் நிலைமை - சிறுவர்களின் பெற்றோர்களே கவனம்.. சுதாரியுங்கள்.!



boy-admitted-in-hospital-for-pubg-addict

இன்றளவில் இளைய சமுதாயத்தினர் படிப்பின் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் ஈடுபாடு கொள்வதை விட ஃபோனில் உள்ள  பப்ஜி, ஃப்ரீ பையர் போன்ற விளையாட்டுகளில் தான் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். மேலும், இது குறித்து முழுமையாக அறிந்து கொள்வதற்காக யூடியூபில் எந்நேரமும் அதனைப் பற்றி மட்டுமே பார்க்கின்றனர். இதனால் சிறிது நாட்களில் கற்பனையான அந்த விளையாட்டிற்கு அடிமையாகி விடுகின்றனர். அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.

17 வயதுடைய ஒரு சிறுவன் பப்ஜி விளையாட்டுக்கு முழுமையாக அடிமையாகி மனதளவில் பாதிக்கப்பட்டு, அரைமயக்கத்தில் இருக்கும்போதுகூட பப்ஜி விளையாட்டு விளையாடுவது போன்ற பாவனைகள் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் தனது குடும்பத்தாருடன் 17 வயதுடைய ஒரு சிறுவன் வசித்து வருகிறான். இந்த நிலையில் சிறுவனை கடந்த திங்கட்கிழமை இரவு மாவட்ட தலைமை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

tamilnaduஅப்போது அரை மயக்கத்தில் இருந்த சிறுவன் பப்ஜி விளையாட்டில் துப்பாக்கியை வைத்து சுடுவது போல பாவனை செய்தவாறே இருந்துள்ளான். இதனைக்கண்ட மருத்துவர்கள் செல்போனில் முழுவதுமாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்ததால் அவர் மனதளவில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளனர்.

மேலும், இவரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் சிறுவனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த மருத்துவர்கள், காலை சென்று பார்த்தபோது யாரிடமும் சொல்லாமல் அவரது பெற்றோர் சிறுவனை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இந்த விஷயம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர் சிறுவன் குறித்து விசாரிப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.