மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண ஆசைக்காட்டி இளம்பெண் கர்ப்பம்.. கம்பி நீட்ட முயன்ற காதலன் கைது!
விழுப்புரம் அருகே உள்ள அகரம் சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் பாலகுமார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்த பெண்ணுடன், பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த பாலகுமார் அந்த பெண்ணை திட்டி கொலை மிரட்டல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலகுமாரை கைது செய்து சரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாலகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை குறித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.