மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இலஞ்சம் கேட்டு அலைக்கழித்த ஆணவ அதிகாரியால், இளைஞர் மனமுடைந்து தற்கொலை..!
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கிவிட்டு, பணம் வழங்க காலதாமதம் செய்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகாமையில் கமுகக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 25). இவர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டத் தொடங்கியுள்ளார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முதல் தவணை தொகை வழங்க மேற்பார்வையாளர் மகேஸ்வரன் என்பவர், மணிகண்டனின் ரூ.3000 லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால், மணிகண்டனிடம் பணம் இல்லாததால் அவர் வேறு ஒருவரிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்தநிலையில், இரண்டாவது தவணை தொகை வழங்கப்பட்ட போதும் ரூ. 15000 பணத்தை மகேஸ்வரன் லஞ்சமாக வாங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மகேஸ்வரன் மன உளைச்சலில் இருந்த நிலையில், மூன்றாவது தவணைத் தொகையை வழங்குவதற்கு காலதாமதம் செய்ததால், மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
மேலும், தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக மணிகண்டன் வீடியோ ஒன்றை பேசியுள்ளார். தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.