திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளைஞரின் செல்போனை புடுங்கிய போலீசார்.. ஆத்திரத்தில் எடுத்த அதிர்ச்சி முடிவு!
தெலுங்கானா மாநிலத்தில் போலீசார் செல்போனைட புடுங்கியதால், இளைஞர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் அதனை வீடியோவாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் அந்த இளைஞரின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அருகில் இருந்தா பெட்ரோல் பங்கிற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கி தனது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு திடீரென தனது தீ வைத்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது மோசமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.