மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலி வேறு ஒருவருடன் பழகியதால் துடி துடிக்க காதலன் செய்த சம்பவம்.!
திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தில் தினமும் அதிக அளவில் பயணிகளின் கூட்டம் காணப்படும். இந்த நிலையில் சாந்தி என்பவர் மினி பேருந்து நிற்கும் இடத்தில் இருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியின் பின்புற கருத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் சாந்தி அலறி துடித்து கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பக்கம் பக்கத்தினர் சாந்தியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கத்தியால் குத்திய கணேசனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே போலீசார் கணேசனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சாந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடன் பழகி வந்ததாகவும், அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்ததாக கூறியுள்ளார். ஆனால் சாந்தி தற்போது தன்னை விட்டு வேறு ஒரு இடம் பழகுவதை அறிந்து கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.